கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றிபெற பாடுபட வேண்டும், அதற்காக கட்சியினர் பாடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


கோவை: கோவை மண்டல மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள மணி மஹாலில் நேற்று (பிப்.4) நடைபெற்றது. மாநில செயலாளர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவர்கள் மௌரியா, தங்கவேலு, மயில்சாமி, அனுஷா ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபட வேண்டும், அதற்காக கட்சியினர் பாடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் மக்கள் நீதி மய்யத்தில் தலைவர் அறிவிக்கும் வேட்பாளருக்கு கட்சியினர் முழு ஆதரவை தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மெளரியா செய்தியாளர்களை சந்தித்து பேசியாதவது, கோவை மண்டலத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில தலைமை அலுவலகத்தில் இருந்து வந்துள்ள தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் தேர்தல் வழிமுறைகள் குறித்தும், தேர்தல் பணி குறித்தும், அதற்கான வழிமுறைகள் வகுக்கவும் கட்சியினருக்கு இந்த கூட்டத்தின் மூலம் அறிவுறுத்தி உள்ளோம்.

இந்த கூட்டத்தில் நாங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பாக கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து பாராளுமன்ற தொகுதியிலும் எவ்வாறு கட்சி பணி செய்ய வேண்டும், தேர்தல் பணியாற்ற வேண்டும், எவ்வாறு ஒன்றிணைந்து இந்த பணியை செய்ய வேண்டும் என நுணுக்கமாக அறிவுரைகளை வழங்கியுள்ளோம்.

நிர்வாகிகள் மிகச் சிறப்பாக பணியாற்றி வெற்றிக்காக உழைப்பார்கள். மேலும் எங்களுடைய மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான பூத் கமிட்டிகளை அமைப்பதற்காக பாடுபடுவார்கள். இன்னும் ஒரு சில இடங்களில் பூத் கமிட்டி அமைக்க தேர்தல் பணிக்கான வியூகத்தை வகுத்து கூறியுள்ளோம் அதன்படி செயல்பட்டு அவர்கள் வெற்றியை பரிசளிப்பார்கள்.

யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என எந்த முடிவும் நாங்கள் செய்யவில்லை. தலைவர் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்வார். மேலும் கூட்டணியை பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தலைவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார். எத்தனை தொகுதி என்பதை அவர்தான் முடிவு செய்வார். கூட்டணி உள்ளதா இல்லையா என்பதை தலைவர் கமலஹாசன் தான் அறிவிப்பார் என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...