கோவையில் கையில் குப்பையுடன் அதிமுக கவுன்சிலர்கள் நூதன போராட்டம்

கோவை மாநகரில் சேரும் குப்பைகளை அகற்ற தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். னசரி அகற்ற படாத குப்பைகளுக்கு எதற்கு குப்பை வரி செலுத்தவேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.


கோவை: கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்வு நடைபெறும் வளாகத்திற்கு வெளியே அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஷர்மிளா, ரமேஷ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் கையில் குப்பையுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அவர்கள், கோவை மாநகரில் சேரும் குப்பைகளை அகற்ற தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என கையில் நோட்டீஸ் வைத்து வெளியே நின்றனர். தினசரி அகற்ற படாத குப்பைகளுக்கு எதற்கு குப்பை வரி செலுத்தவேண்டும் எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றத்தால் போத்தனூர், உக்கடம், குடியமுத்தூர், மதுக்கரை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றி நினைவூட்டி, அதை விரைந்து சரி செய்யவேண்டி போராடினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...