அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தி அனுமதி வழங்கிட கோவையில் சிறப்பு முகாம்

அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தி அனுமதி அளிப்பது தொடர்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி மூலம் வரும் 11.02.2024 மற்றும் 18.02.2024 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் மண்டல அலுவலகங்களில் நடத்த இருப்பதாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் காலம் இம்மாதம் பிப்ரவரி 2024 உடன் முடிவடைகிறது. எனவே, பொது மக்கள் 20.10.2016 முன்பு பதிவு செய்யப்பட்ட மனை மற்றும் பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, கோயம்புத்தூர் மாநகராட்சி மூலம் வரும் 11.02.2024 மற்றும் 18.02.2024 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் மண்டல அலுவலகங்களில் நடத்த இருப்பதால், அதுசமயம் பொதுமக்கள் தங்களின் மனை ஆவணம், வரைபடம் மற்றும் வங்கி கணக்கிலிருந்து விண்ணப்ப கட்டணமாக ரூ.500/- ஆன்லைனில் செலுத்தி இம்மாத இறுதிக்குள் உரிய காலகெடுவுக்குள் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்து பயனடையுமாறும், மேலும் தங்கள் பகுதியில் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவு வரைபடங்களை வரன்முறைப்படுத்திட பிரதான அலுவலகம் நகரமைப்பு பிரிவில் 23.02.2024-க்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்படி அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மாநகராட்சி மூலமாக வரன்முறைபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...