கோவையில் 15 பவுன் வழிப்பறி செய்ததாக காவல்துறையிடம் நாடகமாடிய அமமுக மகளிர் அணி மாவட்ட செயலாளர்

சரவணம்பட்டி காவல்துறையினர் சந்திரகலாவை இன்று (பிப்.5) அழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரிடம் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நகை திருடு போகவில்லை என்றும், தான் பொய்யான தகவலை காவல்துறையிடம் அளித்ததாகவும் சந்திரகலா ஒப்புக்கொண்டார்.


கோவை: கோவை கணபதி நேரு நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சந்திரகலா (52), இவர் அமமுக மகளிர் அணி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சத்தி சாலையில் இருந்து தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, இவர்களது வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் சந்திரகலா கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தங்க செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு சென்றதாகவும், அப்போது சந்திரகலாவும் அவரது கணவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததாகவும், இதனால் சந்திரகலாவுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை குனியமுத்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த மாதம் கணபதி பகுதியில் சந்திரகலாவிடம் வழிப்பறியில் முயற்சி செய்ததாகவும், ஆனால் 15 சவரன் நகையை நான் வழிப்பறி செய்யவில்லை என்றும் அந்த நபர் காவல்துறையிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல்துறையினர் சந்திரகலாவை இன்று (பிப்.5) அழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரிடம் வைத்து விசாரணை மேற்கொண்ட போது நகை திருடு போகவில்லை என்றும், தான் பொய்யான தகவலை காவல்துறையிடம் அளித்ததாகவும் சந்திரகலா ஒப்புக்கொண்டார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...