கோவையில் கைவினைஞர் பயிற்சியில் சேர மாவட்ட ஆட்சியர் அழைப்பு

முன்னாள் பயிற்சியாளர்கள், தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையங்களை, வரும், 15ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தி, தேர்வில் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கைவினைஞர் பயிற்சி திட்டத்தில், 2017-19ல் இரண்டாண்டு தொழிற்பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும், தேர்வில் பங்கேற்க இயலாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு, மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இத்தேர்வு தொடர்பாக, முன்னாள் பயிற்சியாளர்கள், தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையங்களை, வரும், 15ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தி, தேர்வில் பங்கேற்கலாம்.

இது தொடர்பான விபரங்களுக்கு, https://skilltraining.tn.gov.in மற்றும் https://ncvtmis.gov.in ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...