பா.ஜ.க. அரசைக் கண்டித்து கோவையில் வரும் 8ம் தேதி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மாநில உரிமைகள் காத்திட, ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 08.02.2024, வியாழக்கிழமை, மாலை 5 மணியளவில், கோவை சிவானந்தா காலனி, பவர் ஹவுஸ் முன்புறம் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ இன்று (பிப்.6) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநில உரிமைகள் காத்திட, ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 08.02.2024, வியாழக்கிழமை, மாலை 5 மணியளவில்,கோவை சிவானந்தா காலனி, பவர் ஹவுஸ் முன்புறம் ‌நடைபெறும் "கண்டன ஆர்ப்பாட்டத்தில்" தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவரின் ஆணைக்கிணங்க, கோவை மாநகர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழக‌ நிர்வாகிகள், மேயர், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள்‌, அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வட்டக்கழகச் செயலாளர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள், கழக செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள், BLA-2 பாக முகவர்கள், பூத் கமிட்டி ‌நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு எதிராக கண்டனக் குரலை எழுப்பிட‌ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...