சாலையோர வியாபாரிகள் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் வழியாக முதலமைச்சருக்கு விண்ணப்பம்

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல், சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டத்தை மாவட்டம் முழுவதும் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட தெரு வியாபாரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழக முதலமைச்சருக்கு விண்ணப்பம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில்,குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1. 2015ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல், சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டம் அரசிதழில் வெளியிட்டு 02.11.2015 முதல் அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்களால் முறையாக அமல்படுத்தப்படவில்லை. மாவட்டம் முழுவதும் இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

2. மாநிலம் முழுவதும் தெரு வியாபாரிகள் அனைவருக்கும் வியாபாரச் சான்று மற்றும் ஸ்மார்ட் கார்டு, அடையாள அட்டை காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் வழங்க வேண்டும்.

3. அடையாள அட்டை முழுமையாக வழங்கப்பட்டு வணிகக் தேர்தல் நடத்திட வேண்டுவதுடன் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதை உறுதிப்படுத்தி வணிகக் குழுவை முறையாக செயல்படுத்த வேண்டுகிறோம்.

4. வணிகக்குழுவிற்கு அலுவலகம் ஒதுக்கீடு செய்திடவும். பணியாளர்கள் ஒதுக்கீடு செய்து அலுவலகம் முறையாக செயல்பட வேண்டுகிறோம்.

5. தெரு வியாபாரிகளிடம் வணிக கட்டணம் வசூலிக்க டெண்டர் விடுவதை கைவிட வேண்டுவதுடன், திட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள வணிக கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டுகிறோம்.

6. வணிகக்குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டுகிறோம்.

7. தெரு வியாபாரிகள் அனைவருக்கும் வங்கி மூலம் கடன் வழங்கவும் தொழிற்சங்க ஒத்துழைப்புடன் முறையாக திரும்ப செலுத்துவதற்கான பெரும் திட்டம் கொண்டு வந்து அனைத்து தெருவோர வியாபாரிகளுக்கும் பயனடையும் விதத்தில் செயல்படுத்த வேண்டுகிறோம்.

8. தெரு வியாபார பொருட்களை இரவில் பாதுகாப்புடன் வைப்பதற்கான இட வசதி செய்து தர வேண்டுகிறோம்.

9. உள்ளாட்சிப் பகுதிகள் அனைத்திலும் இந்தத் திட்டம் அமல்படுத்த வேண்டும். ஆனால், கிராம ஊராட்சி, பெரும்பாலான பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே. அனைத்து கிராம ஊராட்சி, பேரூராட்சிகளில் இதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...