கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அழைப்பு

நடப்பாண்டு சேர்ந்துள்ள புதிய மாணவர்கள், https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், மாணவர்களுக்கான பகுதியில் நுழைந்து, ஆதார் எண் சமர்ப்பித்து, சரிபார்க்க வேண்டும். வரும், 29ம் தேதிக்குள் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் நேற்று (பிப்.7) வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியருக்கு, பல்வேறு திட்டங்களின் கீழ், தமிழக அரசு கல்வித்தொகை வழங்குகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ - மாணவியருக்கு, எவ்வித நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு, பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நடப்பாண்டு சேர்ந்துள்ள புதிய மாணவர்கள், https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், மாணவர்களுக்கான பகுதியில் நுழைந்து, ஆதார் எண் சமர்ப்பித்து, சரிபார்க்க வேண்டும். வரும், 29ம் தேதிக்குள் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, கல்லுாரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...