கோவை வடவள்ளி இளைஞர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவு

ஆபாசம் படம் பார்ப்பதாகக் கூறி பலரை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்த புகாரில், சபரி என்பவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, அதன் நகல் சிறையில் உள்ள சபரியிடம் நேற்று (பிப்.7) புதன்கிழமை வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் ஆபாசம் படம் பார்ப்பதாகக் கூறி பலரை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வருவதாக மாநகர சைபா் குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சைபா் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், கோவை வடவள்ளியைச் சோ்ந்த சபரி (23) உள்ளிட்ட 10 போ், சைபா் குற்றப் பிரிவு போலீஸார் என்றும், ஆபாச படம் பார்த்ததுக்கு வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க பணம் தர வேண்டும் என்றுகூறி பலரையும் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து சபரி உள்ளிட்ட 10 பேரையும் போலீஸார் அண்மையில் கைது செய்தனா். இந்தக் கும்பலுக்கு தலைமையாக சபரி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்நிலையில், சபரி மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையருக்கு சைபா் குற்றப் பிரிவு போலீஸார் பரிந்துரை செய்தனா்.

இதைத் தொடா்ந்து சபரி மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, அதன் நகல் சிறையில் உள்ள சபரியிடம் நேற்று (பிப்.7) புதன்கிழமை வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...