கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.43 கோடி கடன் உதவி

ஊரகப்பகுதியைச் சார்ந்த 154 மகளிர் சுய உதவிக்களுக்கு ரூ.13.45 கோடி, நகர்ப்புற பகுதியைச் சேர்ந்த 445 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.33.78 கோடி கடன் உதவிக்கான காசோலைகளை, மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் வழங்கினர்.


கோவை: தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 2023 - 24 ஆம் ஆண்டில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு 924 கோடி இலக்கு நிர்ணயித்திருக்கின்றனர். இந்த நிலையிலே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, கோயம்புத்தூரில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் கடன் உதவி தரப்பட்டன.



கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கிலே, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, கலெக்டர் கிராந்தி குமார் பாடி மற்றும் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடனுதவி காசோலைகளை வழங்கினர்.



ஊரகப்பகுதியைச் சார்ந்த 154 மகளிர் சுய உதவிக்களுக்கு 13.45 கோடி, நகர்ப்புற பகுதியைச் சேர்ந்த 445 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 33.78 கோடி கடன் உதவிக்கான காசோலைகளை, மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் வழங்கினர்.



கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களில், 6835 மகளிர்கள் இதன் வாயிலாக சுயதொழில் செய்யவும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் இந்த கடன் உதவி வழங்கினர். இது குறித்து பேசிய கடன் உதவி பெற்ற மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகள், இந்தக் கடனுதவி தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெருமளவில் உதவும் என தெரிவித்தனர்.

குறிப்பாக மகளிர் சுய உதவி குழுக்களின் வாயிலாக கடன் உதவி பெற்றவர்கள், அதனை வைத்து தையலகம், உணவகம், பூக்கடை, ஆடு மேய்த்தல், மாடு மேய்த்தல், கோழி வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சுயதொழில் மேம்படுத்த உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தனர். பெண்கள் எதிர்பார்த்த தொகையை விட கூடுதலாக கடன் உதவி கிடைத்திருப்பது பெரு மகிழ்ச்சி என்றும், இதனை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...