கோவையில் வரும் 10ஆம் தேதி பொது விநியோகத்‌ திட்ட குறைதீர்‌ சிறப்பு முகாம்‌ - ஆட்சியர் அறிவிப்பு

குறைதீர் முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, அலைபேசி எண் மாற்றம், மற்றும் குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (பிப்.8) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 2024 மாதத்தில் வருகின்ற 10.2.2024 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

மேற்படி குறைதீர் முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, அலைபேசி எண் மாற்றம், மற்றும் குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...