கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர் வடிகால் அமைப்பு, பள்ளி மேம்பாட்டு பணிகள் மற்றும் சமுதாயக்கூட வசதிகளை நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் தீவிரமாக நடைபெற்றுவரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இன்று நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.



மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 92க்கு உட்பட்ட இடையர்பாளையம் பிரிவு RKV பள்ளி அருகிலுள்ள பழமுதிர் நிலையம் வீதியில், மழைக்காலங்களில் செங்குளம் நிரம்பி கசிவு நீர் வெளியேறும் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அதேபோல், வார்டு எண் 92க்கு உட்பட்ட சுகுணாபுரம் கிழக்கு மலைப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது மற்றும் கட்டிட பராமரிப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பாலு கார்டன் பகுதியில் மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கத்தை இளைஞர்கள் பயன்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கிருஷ்ணசாமி நகர் பகுதியில் மாநகராட்சி மூலம் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை ஆய்வு செய்த ஆணையர், அங்கு கூடுதலாக சமையல் கூடம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


வார்டு எண் 88க்கு உட்பட்ட அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில், மழைக்காலங்களில் செங்குளம் நிரம்பி கசிவு நீர் வெளியேறி வருவதால், அதனை தடுக்க புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. JJ நகர் அருகில் அமைந்துள்ள வாய்க்காலை தூர்வாருதல் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கிழக்கு மண்டலம் வார்டு எண் 8க்கு உட்பட்ட மகாராஜா விஸ்தரிப்பு பகுதியான நேரு நகரில் நடைபெற்றுவரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தொடர்பாகவும் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். "நல்ல தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும். பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


வடக்கு மண்டலம் வார்டு எண் 13க்கு உட்பட்ட விஜயா நகர் பகுதியில், மழைநீர் வடிகால் நீர் உந்து மின் மோட்டார் இயங்கும் பகுதியினை ஆய்வு செய்தார். அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, அங்கு நடைபெற்றுவரும் தார்ச்சாலைப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வுகளின்போது துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகர நல அலுவலர் Dr.சுபாஷ் காந்தி, உதவி ஆணையர்கள் தட்சிணாமூர்த்தி (தெற்கு), தட்சிணாமூர்த்தி (கிழக்கு), செயற்பொறியாளர் யோகசித்ரா (பொ), உதவி செயற்பொறியாளர்கள் சத்தியமூர்த்தி (பொ), கனகராஜ் (பொ), இளங்கோவன் (பொ), மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மண்டல சுகாதார அலுவலர்கள் முருகன், சந்திரன் (பொ), உதவி பொறியாளர்கள் நவநீதகிருஷ்ணன், முத்துக்குமார், அபிஷ்ராஜ், கோபிநாத், சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், செல்வி சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...