கோவையில் உள்ள தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் திரையரங்கம் இடிப்பு - ரசிகர்கள் வருத்தம்

இந்த திரையரங்கை இடிப்பது மிகுந்த வருத்தமளிப்பதாகவும், அரசோ அல்லது திரையுலகத்தினரோ முன்வந்து இந்த திரையரங்கிற்காக நினைவு சின்னம் ஒன்றை அமைத்து தர வேண்டுமென திரையரங்கில் திரைப்படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் ககோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள டிலைட் திரையரங்கம் தான் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் நிரந்தர திரையரங்கமாகும். 1914ம் ஆண்டு கட்ட இந்த திரையரங்கம் நூற்றாண்டு விழா கண்டும் செயல்பட்டு வந்தது. இந்தியாவில் எடுக்கப்பட்ட பெரும்பாலான திரைப்படங்கள் இங்கு தான் திரையிடப்பட்டது.

இந்திய திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ஆங்கில திரைப்படங்களும் இங்கு திரையிடப்பட்டுள்ளன. தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் இது தான் என்பதால் புகழ்பெற்ற இயக்குர்களின் அனைத்து திரைப்படங்களும் இங்கு திரையிடப்பட்டுள்ளன. இந்த திரையரங்கம் கோவையின் முக்கியமான அடையாளமாக திகழ்ந்து வருகிறது.

குறிப்பாக திரையுலகத்தினருக்கு முக்கியமான அடையாளமாகவும் திகழ்ந்துள்ளது. இந்த திரையரங்கம் துவங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், பல திரையங்குகள் கட்டப்பட்டு நவீனமயம் ஆக்கப்பட்டும் இந்த திரையரங்கில் பெரும்பான்மையான வசதிகள் மாற்றம் செய்யப்படவில்லை. கருப்பு வெள்ளை திரைப்படங்களில் துவங்கி வண்ணப்படங்கள் என அனைத்து படங்களும் இங்கு திரையிடப்பட்டு வந்த நிலையில் புதிய புதிய திரையரங்குகள், நவீன தொழில்நுட்பங்கள் வர வர இந்த திரையரங்கிற்கு வருவதை மக்கள் குறைத்து விட்டனர்.

ஒரு கட்டத்தில் இந்த திரையரங்கிற்கு வருவதையே நிறுத்தி விட்டனர். இருப்பினும் 1980, 90-களில் வெளியான படங்கள் குறைந்த பார்வையாளர்களுடன் இங்கு திரையிடப்பட்டு வந்தது. தற்போது இந்த புகழ்பெற்ற திரையரங்கை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இது இந்த திரையரங்கில் படங்களை பார்த்து ரசித்த ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. இந்த இடத்தில் வணிக கட்டிடம் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த திரையரங்கில் திரைப்படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் கூறுகையில் இந்த திரையரங்கை இடிப்பது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அரசோ அல்லது திரையுலகத்தினரோ முன்வந்து இந்த திரையரங்கிற்காக நினைவு சின்னம் ஒன்றை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...