கோவையில் வரிகளை செலுத்த சிறப்பு முகாம் – மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவிப்பு

சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களையும் செலுத்த பொதுமக்களின் வசதி கருதி வார்டு பகுதிகளில் 10.02.2024 மற்றும் 11.02.2024 ஆகிய தேதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களையும் செலுத்த பொதுமக்களின் வசதி கருதி மாநகராட்சியின் வார்டு பகுதிகளில் 10.02.2024 மற்றும் 11.02.2024-ம் தேதிகளில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்படவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

நடப்பு 2023-24ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களையும் செலுத்த பொதுமக்களின் வசதி கருதி மாநகராட்சியின் வார்டு பகுதிகளில் 10.02.2024 மற்றும் 11.02.2024 ஆகிய தேதிகளில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 10.02.2024 அன்று வார்டு எண்.34-ல் மஞ்சீஸ்வரி காலனி, வார்டு எண்.35-ல் கற்பக விநாயகர் கோவில், தேவாங்க நகர், வார்டு எண்.75- ல் மாரியம்மன் கோவில் தெரு, சீரநாயக்கன்பாளைத்திலும், 11.02.2024 அன்று, வார்டு எண்.33-ல் மூவர் நகர் நூலுக கட்டிடம், வார்டு எண்.36-ல் நியாய விலைக்கடை, புது தில்லை நகர், 5வது வீதியிலும், 74-ல் சத்துணவுக் கூடம், பாரதியார் வீதி, பூசாரிபாளையத்திலும், 75-ல் மாரியம்மன் கோவில் தெரு, சீரநாயக்கன்பாளையத்திலும், சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறவுள்ளது.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.7 மற்றும் 8-ல் நேரு நகர் கிழக்கு பகுதியிலும், வார்டு எண்.24-ல் குருசாமி நகர் பகுதியிலும், வார்டு எண்.56 ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம் மற்றும் வார்டு எண்.57-ல் நெசவாளர் காலனி பகுதியிலும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.89-ல் சுண்டக்காமுத்தூர் மாநகராட்சி வார்டு அலுவலகத்திலும், வார்டு எண்.99-ல் செட்டிபாளையம் மாநகராட்சி பூங்காவிலும், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.15 அங்கன்வாடி மையம், சுப்ரமணியம்பாளையம், வார்டு எண்.25-ல் காந்திமாநகர் அரசு ஆரம்பப்பள்ளியிலும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.32ல் சிறுவர் பூங்கா நாராயணசாமி வீதியிலும், வார்டு எண்.62 பெருமாள் கோவில் வீதி, மாநகராட்சி வணிக வளாகம், வார்டு எண்.80-ல் கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், வார்டு எண்.84ல் ஜி.எம்.நகரில் உள்ள தர்கத் இஸ்லாம் ஆரம்பப் பள்ளி ஆகிய இடங்களில் 10.02.2024 மற்றும் 11.02.2024 ஆகிய தினங்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறவுள்ளது.

தவிர, 31.03.2024 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக ஏனைய நாட்களில் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம்போல் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை செயல்படும்.

எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...