பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின்கீழ் கோவையில் செயல்படும் பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசுத் தொடக்கப் பள்ளியில் ஒரு இடைநிலை ஆசிரியா் பணியிடம் ரூ.12 ஆயிரம் என்ற மதிப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்படவுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் நேற்று (பிப்.9) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்ட பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசுத் தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின்கீழ் கோவையில் செயல்படும் பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசுத் தொடக்கப் பள்ளியில் ஒரு இடைநிலை ஆசிரியா் பணியிடம் ரூ.12 ஆயிரம் என்ற மதிப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்படவுள்ளது.

இப்பணிக்கு பட்டய ஆசிரியா் பயிற்சி, பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் இளநிலை ஆசிரியா் பட்டயப் பயிற்சி அல்லது சிறப்பு ஆசிரியா் பட்டயப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் டெட் தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இடைநிலை ஆசிரியா் பதவிக்கு ஆசிரியா் வாரியத்தின் வாயிலாக நடத்தப்படும் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் இல்லையெனில் பள்ளிக் கல்வித் துறையின் வாயிலாக நடத்தப்படும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சுய விண்ணப்பத்துடன் கல்விச் சான்று, ஜாதிச் சான்று, குடும்ப அட்டை நகல், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் தலைமை ஆசிரியா், பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசு ஆரம்பப் பள்ளி, உலியம்பாளையம், கோவை - 109 என்ற முகவரிக்கு பிப்ரவரி 12 -ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...