அடுத்து வரும் இரண்டு மாதங்கள் மிக முக்கியமான மாதங்கள் – கோவையில் அமைச்சர் உதயநிதி பேச்சு

கோவை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு குடிநீர் அபிவிருத்தி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், எனது வீட்டிலும், நமது முதல்வர் வீட்டிலும் அதிகம் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்கின்ற பொருட்களை தான் பயன்படுத்துகிறோம் எனவும் அமைச்சர் உதயநிதி கூறினார்.


கோவை: கோவை மாநகராட்சி மற்றும் புதியதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூ.780 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை அமைச்சர் உதயநிதி கோவையில் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி, கோவை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு இந்த குடிநீர் அபிவிருத்தி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்,

எனது வீட்டிலும், நமது முதல்வர் வீட்டிலும் அதிகம் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்கின்ற பொருட்களை தான் பயன்படுத்துகிறோம் எனவும் கூறினார்.



மேலும் சீரான குடிநீர் விநியோகத்தை தமிழகம் முழுவதும் திமுக அரசு சிறப்பாக செய்து கொண்டிருபதாவகவும், இன்று தமிழ்நாடு வேகமான வளர்ச்சியை அடைந்து வருவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் தான் அனைத்து நகரங்களும் சீராக வளர்ந்து வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் உதயநிதி, மற்ற மாநிலங்களை விட சிறப்பான வளர்ச்சியை தமிழகம் அடைந்து, மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக இந்த திராவிட மாடல் அரசு விளங்கி வருவதகாவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த 5 வருடத்தில் ஒன்றிய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரியாக கொடுத்துள்ளதகாவும், ஆனால் நமக்கு திருப்பி தந்தது ஒரு லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் அடுத்த இரண்டு மாதம் மிக முக்கியமான மாதம் எனவும்,

கடந்த காலங்களில் இங்கு சிறு, சிறு தவறுகள் இருந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு, அனைத்து நிர்வாகிகளும் நமது திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...