போலி துப்பாக்கியுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபரால் பரபரப்பு

கொலை மிரட்டல் வருவதால் தன்னையும், தனது குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கி வைத்துக் கொள்ள, அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளதாக லோட்டஸ் மணிகண்டன் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு நாள் நடைபெற்றது. அப்போது, ஹிந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன், போலி துப்பாக்கியை கையில் ஏந்தியபடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறுகையில், தான் இந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனத் தலைவராக இருந்து வருகின்றேன். கடந்த 20 ஆண்டுகளாக இந்துத்துவா பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையாக புகார் அளிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதனால் எனக்கு மதரீதியாகவும், பல்வேறு சமூக பிரச்சனைகளை கையில் எடுப்பதால் அவர்கள் மூலமாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. எனவே தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது. எனவே தற்காத்துக் கொள்வதற்காக துப்பாக்கி வைத்துக் கொள்வதற்காக அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக வந்துள்ளதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து போலீசார் அவரை மனு அளிப்பதற்கு அனுமதி அளித்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த லோட்டஸ் மணிகண்டன் துப்பாக்கி லைசென்ஸ் வேண்டி தனது கோரிக்கை மனுவை அழித்துவிட்டு சென்றார்.



இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீஸ் துப்பாக்கியுடன் லோட்டஸ் மணிகண்டன் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...