கருமத்தம்பட்டியில் உள்ள வளாகத்தில் பார்க் கல்வி குழுமத்தின் இரண்டு கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதுகலை ஏரோநாட்டிக்கல் பொறியியல் பிரிவில் மாணவி மோனிஷா பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அந்த மாணவிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் Dr.R.வேல்ராஜ் பதக்கத்தை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


கோவை: கோவை கணியூர் மற்றும் கருமத்தம்பட்டியில் அமைந்துள்ள பார்க் கல்வி குழுமத்தின் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா கருமத்தம்பட்டியில் உள்ள கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் 35வது பட்டமளிப்பு விழா மற்றும் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 22 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.R.வேல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொறியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

899 இளங்கலை பொறியியல் மற்றும் முதுகலை பொறியியல் பட்டதாரி மாணவர்கள் தங்கள், சான்றிதழ்களை மிக பிரமாண்டமான விழாவில் பெற்றுக்கொண்டனர்.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் முதுகலை ஏரோநாட்டிக்கல் பொறியியல் பிரிவில் மாணவி மோனிஷா பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். தங்கப்பதக்கத்தை துணை வேந்தர் Dr.R.வேல்ராஜியிடம் பெற்றுக்கொண்டார். மேலும் மூன்று இளங்கலை பொறியியல் பட்டதாரிகள் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றுள்ளனர்.

பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் Dr . P.V. ரவி மற்றும் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி தலைமையில் இவ் விழா நடைபெற்றது. பொது மேலாளர் சதிஷ் குமார் வரவேற்புரை வழங்கினார். தனது வரவேற்புரையில் இந்த கல்வியாண்டில் இந்த குழுமத்தின் இரண்டு பொறியியல் கல்லூரிகளும் NAAC தரச்சான்று அதிக மதிப்பெண்ணுடன் பெற்றுள்ளதாகவும், பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஏரோநாட்டிக்கல் பொறியியல் துறை முன்னாள் மாணவர்கள் 6 பேர் சந்திரயான் திட்டத்தில் பணி செய்ததாகவும் தெரிவித்து வரவேற்புரையை நிறைவு செய்தார்.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தனது உரையில், இந்தியர்களின் சராசரி வயது 28 என்றும் மற்ற நாடுகளில் 45 க்கும் மேல் என்றும், இந்த மனித வள ஆற்றலை உலகமே பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும், இப்போது வெளிவரும் பட்டதாரிகளுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் காத்திருப்பதாகவும் கூறினார்.

2014 யில் 400 புதிய உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும், தமிழ்நாட்டின் அரசும், இந்திய அரசும் தற்போது ஏற்படுத்தியுள்ள கால சூழ்நிலைக்கு உகந்தவாறு இப்பொழுது ஒரு லட்சத்திற்கும் மேலாக உற்பத்தி நிறுவனங்கள் ஆரம்பிக்க படுவதாகவும் தெரிவித்தார்.

தங்களது துறைகளில், நிறுவனங்களில் வெற்றி பெற அறிவும், திறமையும் மட்டும் இருந்தால் போதுமானது அல்ல, தகுந்த அணுகுமுறையும் வேண்டும் என்று அறிவுறுத்தினார். இன்று செயற்கை நுண்ணறிவு மூலமாக பல துறைகள் முன்னேறி வருவதாகவும் ஆயிரம் பேர் சேர்ந்து உருவாக்கிய செயலியை ஒருவர் பயன்படுத்தி இறுதி தயாரிப்பை உருவாக்குவதாகவும் தெரிவித்தார்.

பொறியாளர்களின் பங்களிப்பு எல்லா துறைகளிலும் இருப்பதாகவும் இன்றைய தேவை Multi Disciplinary Integration என்றும் தெரிவித்தார். இந்தத் தேவைகளை புரிந்து இந்த கல்லூரி நிறுவனம் தனித்துவமான பல பொறியியல் படிப்புகளை வழங்குவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

இறுதியாக பொறியாளர் மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியரின் ஆசீ பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தி தனது உரையை நிறைவு செய்தார். தொடர்ந்து பட்டதாரிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார். இறுதியாக தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...