கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாமில் பங்கேற்க மாணவர்களுக்கு கோவை ஆட்சியர் அழைப்பு

ஈச்சனாரியில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமியில் வரும் பிப்.15 ஆம் தேதி கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (பிப்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, ஈச்சனாரியில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமியில் வரும் பிப்.15 ஆம் தேதி கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற உள்ளது.

இதில் கோயம்புத்தூர் மாவட்டம் கலை மற்றும் அறிவியல் துறை மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறை மாணவ, மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும், கல்வி கடன் கிடைப்பதற்காக, கலெக்டர் தலைமையில் டி.ஆர்.ஓ.,வை உறுப்பினர் செயலராக கொண்டு, 10 அலுவலர்கள் கொண்ட, முதன்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, கல்வி கடன் வழங்குவதை கண்காணித்து, முறைப்படுத்தி வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில், இதற்கென தனிப்பிரிவு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...