கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் பட்டமளிப்பு விழா

தமிழகம் முழுவதும் 15 பயிற்சி மையங்களில் பயின்ற முதியவர்கள் உட்பட 706 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைகழக பட்டமளிப்பு அரங்கில் நடைபெற்றது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கி வரும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் கடந்த 2005 ல் துவங்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து மற்ற பட்டபடிப்பு முடித்த மாணவர்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் படித்து வருகின்றனர்.



இந்நிலையில் தமிழகம் முழுவதும் 15 பயிற்சி மையங்களில் பயின்ற முதியவர்கள் உட்பட 706 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைகழக பட்டமளிப்பு அரங்கில் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட மாணவர்கள் தங்களது பட்டத்தை பெற்றனர். குறிப்பாக உரம் கடை வைத்திருப்போர் கட்டாயம் துறை சார்ந்த பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரக்கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஒரு ஆண்டு படிக்கும் டிப்ளமோ அக்ரி இன்புட்ஸ் போன்ற படிப்புகளை கற்று தேரி பட்டம் பெற்றனர்.



இதில் 19 பெண்கள் உட்பட 49 பேர் மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பிடித்தனர்.

இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற 59 வயது முதியவர் ஒருவர் அனைத்து செமஸ்டர்களையும் எழுதி தேர்ச்சி பெற்ற நிலையில், அவர் இன்று பட்டம் பெற்றார். பி.ஏ பட்டதாரியான முதியவர் வயதான காலத்தில் பட்டம் பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், புதிய அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...