பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள மதுபானக் கடையினை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை கணபதி பகுதி 45-வது வார்டு பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் இடமாற்றம் செய்யபட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் அதே இடத்தில் அமைவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.



கடந்த 18 ஆண்டுகளாக கணபதி, 45-வது வார்டில் இயங்கி வந்த மதுபான கடை எண்: 1548 பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் மதுபானக் கடை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, இந்த மதுபானக் கடை அதிக மக்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் வழிபாடு தலங்கள் உள்ள பகுதியில் உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது என போராட்டஙகள் நடைபெற்றதைத் தொடர்ந்து அங்கிருந்து மேற்குறிப்பிட்ட கடை அகற்றப்பட்டது. இக்கடையினால், இதுவரை வாகன விபத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழிந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு அங்கு மதுபான கடை அமைவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தற்போது மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...