கோவை உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் நாய் தொல்லை - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஒண்டிப்புதூா், சீரநாயக்கன்பாளையம் பகுதிகளில் இயங்கி வரும் நாய்கள் கருத்தடை மையங்களுடன், கூடுதலாக கருத்தடை மையங்களை ஏற்படுத்தி மாநகரில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாநகரப் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூா், ராமநாதபுரம், புலியகுளம், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றி வருகின்றன.

மாநகரப் பகுதிகளில் சாலைகளில் சுற்றும் தெருநாய்களால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இரவுப் பணி முடித்து இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் கூட்டம் துரத்துவதால், விபத்துகள் ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யும் பணியில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாநகரில் நாய்கள் தொல்லை மேலும் அதிகரித்து வருகிறது.

எனவே ஒண்டிப்புதூா், சீரநாயக்கன்பாளையம் பகுதிகளில் இயங்கி வரும் நாய்கள் கருத்தடை மையங்களுடன், கூடுதலாக கருத்தடை மையங்களை ஏற்படுத்தி மாநகரில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் இன்று (பிப்.19) கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...