கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் எபிவிபி அமைப்பு மனு

கல்லூரி மாணவர்கள் போதை பொருள் பழக்கத்தினால் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு படிப்பையும், எதிர்காலத்தையும் வீணாக்கி வருகின்றனர் என்று எபிவிபி அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை அதிகளவில் இருப்பதால் கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்து வருவதால் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டக் கல்லூரி மாணவர் விக்னேஷ், கோவை மாவட்டத்தில் அதிகளவில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாகவும் அதனை கல்லூரி மாணவர்கள் வாங்கி பயன்படுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கல்லூரி மாணவர்கள் போதை பொருள் பழக்கத்தினால் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு படிப்பையும், எதிர்காலத்தையும் வீணாக்கி வருகின்றனர்.



இதனால் காவல்துறையினர் மாணவர்கள் மீது வழக்கு தொடர்ந்து எதிர்காலத்தை வீணாக்குகின்றனர். தமிழக அரசும், கோவை மாவட்ட நிர்வாகமும் போதை பொருட்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும், அதற்கு முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசு மற்றும் கோவை மாவட்ட நிர்வாக அலட்சிய போக்கால் நாளுக்கு நாள் போதை பொருள் அதிக அளவில் விற்பனையாகி வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...