திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

வ.உ.சிதம்பரனார் பிள்ளை குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிள்ளை குறித்து அவதூறாக பேசியதாகவும், இந்தப் பேச்சுக்கு ஆ.ராசா பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், சுதந்திரப் போராட்ட வீரர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசாவின் மீது திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆ.ராசாவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், கிழித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...