கோவையில் நாளை நடைபெறும் பிளஸ் 2 தேர்வில் 33,659 மாணவ, மாணவியர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வை 363 பள்ளிகளைச் சோ்ந்த 33,659 மாணவ,மாணவிகள் எழுத உள்ளனா். இவா்களுக்காக 127 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


கோவை: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்கி 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. மாணவர்கள் அனைத்து தேர்வுகளையும், காலை 10:00 முதல் மதியம் 1:15 மணி வரை எழுதுவர்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வை நாளை மார்ச் 1 ஆம் தேதி 363 பள்ளிகளைச் சோ்ந்த 33,659 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனா். இவா்களுக்காக 127 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தோ்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக பறக்கும் படைகள், கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி 1.15 மணி வரை நடைபெறுகின்றன. முதல் நாளில் மொழிப்பாடத் தோ்வு நடைபெற உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...