ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியும் ஸ்ரீ ராம்ஸ் வாலிபால் அகாடமியும் இணைந்து வாலிபால் வீரர்கள் தேர்வு வரும் ஏப்ரல் 5, 6ம் தேதிகளில் நடைபெறவுள்ளது

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியும் ஸ்ரீ ராம்ஸ் வாலிபால் அகாடமியும் இணைந்து நடத்தும் வாலிபால் வீரர்கள் தேர்வு வரும் ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் காலை 7.30 மணி அளவில் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லாரியில் உள்ள வாலிபால் மைதானத்தில் அர்ஜுனா மற்றும்  துரோணச்சார்யா விருது பெற்ற இந்திய சீனியர் வாலிபால் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ஜி.இ.ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் சர்வதேச வாலிபால் வீரர் வி.சி.ராமலிங்கம் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற உள்ளது.

வாலிபால் தேர்வுக்கு வரும் வீரர்கள் பிளஸ்-2 தேர்ச்சியடைந்த அல்லது கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படித்த அல்லது இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்ற மாணவர்ககளாக இருத்தல் வேண்டும். மேலும் விளையாட்டு வீரர்களின் குறைந்தபட்ச உயரம்190 செ.மீ. ஆகும்.

வாலிபால் அகாடமியில் தேர்வு பெறும் வீரர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா காலைக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு, வாலிபால் விளையாட்டுக்குரிய அனைத்துவகை சீருடை, உணவு, இருப்பிடம் ஆகியன இலவசமாக வழங்கப்பட்டு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

வாலிபால் தேர்வுக்கு வரும் வீரர்களுக்கு ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 6 வரை உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக கல்லூரி விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வாலிபால் விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள இளம் வீரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கல்லூரியின் முதல்வர் பெ. பாபா ஞானக்குமார் மற்றும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஆர்.சரவணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

மேலும் தகவலுக்கு தொடர்புக்கு் 09894170112  அல்லது 09894648915 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது [email protected][email protected] என்னும் இணையதள முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...