வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கோவை மாநகராட்சி பொறியாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை

கடந்த 21 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தநிலையில், வழக்கை நேற்று (பிப்.29) விசாரித்த நீதிபதி மோகனரம்யா, குற்றம் சாட்டப்பட்ட சங்கர நாராயணனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


கோவை: கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றியவர் சங்கர நாராயணன். இவர் பணியாற்றிய காலத்தில், 1995, ஏப்., முதல் டிச., 2000 வரையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் அளிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கையில், சங்கர நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில், 12.57 லட்சம் ரூபாய் சொத்து குவித்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக, 2002, மார்ச் 4ல், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர் மீது, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 21 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை நேற்று (பிப்.29) விசாரித்த நீதிபதி மோகனரம்யா, குற்றம் சாட்டப்பட்ட சங்கர நாராயணனுக்கு ஓராண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...