காங்கேயத்தில் மரத்தை வெட்டிய தனியார் நிறுவனத்தின் மீது காவல் ஆய்வாளரிடம் சமூக ஆர்வலர்கள் புகார்

இரவோடு இரவாக மரத்தை வெட்டிய தனியார் நிறுவனத்தின் மீதும், ஜேசிபி வண்டியின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் திருப்பூர் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சென்னிப்பா தியேட்டர் பேருந்து நிறுத்தம். மேலும் இந்த இடத்தில் இயங்கி வந்த தியேட்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இயங்கவில்லை. அதனால் அந்த தியேட்டர் இருந்த இடத்தை வாங்கிய தனியார் நிறுவனம் முழுவதுமாக இடித்துவிட்டு அந்த இடத்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நாளை அந்த தனியாருக்கு சொந்தமான டிபார்ட்மெண்ட் ஸ்டோர் துவக்க விழா நடைபெற இருக்கும் வேளையில் நேற்று நள்ளிரவு ஜேசிபி இயந்திரத்தை வைத்து அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரத்தை அடியோடு பிடுங்கி விட்டு அந்த இடத்தில் மரம் இருந்ததற்கான ஆதாரங்களையும் அளித்து விட்டனர் என பல்வேறு சமூக ஆர்வலர்கள் இன்று காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி, காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர்.

மேலும் மரத்தை வெட்டிய தனியார் நிறுவனத்தின் மீதும், ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க வேண்டும். மேலும் மரத்தை வெட்டி இடத்திலேயே மீண்டும் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும். இல்லை என்றால் 50க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி அந்த நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

மரத்தை வெட்டுவதற்கு முன்பே சில சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று தெரிவித்து வந்ததையும் மீறி அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இரவோடு இரவாக மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியது இப்பகுதி பொதுமக்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் வரும் பயணிகள் இந்த வேப்பமரத்தின் நிழலில் நின்றுதான் பேருந்துக்கு காத்திருந்தனர். தற்போது இந்த மரம் இல்லாமல் வெய்யிலில் நிற்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...