திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் - PRG அருண்குமார் MLA அறிவிப்பு

விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும், தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழித்து வருவதற்கும் கண்டனம் தெரிவித்து வரும் (04.03.2024) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.


கோவை: கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான PRG.அருண்குமார் MLA இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும், தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழித்து வருவதற்கும், போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து, அ.இ.அ.தி.மு.க இளைஞர், இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற (04.03.2024) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் செஞ்சிலுவைச் சங்கம் முன்பு நடைபெற உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...