கோவை சோமையம்பாளையத்தில் உள்ள PSBB பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் - மக்கள் அச்சம்

இன்றும் (மார்ச்.4) PSBB பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இரவு இரண்டு மணியளவில் மிரட்டல் வந்த நிலையில் உடனடியாக அங்கு வந்த போலீசார் பள்ளி முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சந்தேகிக்கப்படும் பொருட்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை சோமையம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் PSBB பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மிரட்டல் வந்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக பள்ளி நிர்வாகம் குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தது. மேலும் பெற்றோர்களும் பதற்றத்துடன் வந்து அவர்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே வடவள்ளி போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பள்ளி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அன்றைய தினம் சென்னையில் இயங்கி வரும் PSBB பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றும் (மார்ச்.4) கோவை சோமையம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் PSBB பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இரவு இரண்டு மணியளவில் மிரட்டல் வந்த நிலையில் உடனடியாக அங்கு வந்த போலீசார் பள்ளி முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் சந்தேகிக்கப்படும் பொருட்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே இன்று வரும் பள்ளி குழந்தைகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...