கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையை பிளேடால் கிழித்துக்கொண்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி

கடன்காரங்க வட்டிக்கு மேல அசலை திருப்பிக் கொடுக்க சொல்லி பலவகையில் நெருக்கடி கொடுப்பதாக பிஎன் புதூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நிவாசன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையை பிளேடால் கிழித்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.


கோவை: கோவை பிஎன் புதூரை சேர்ந்தவர் நிவாசன். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். கொரோனா காலத்தில் கடன் வாங்கி இருக்கின்றார். வாங்குன கடனுக்கு வட்டியும் கட்டி இருக்கிறார். ஆனால் கடன்காரங்க வட்டிக்கு மேல அசலை திருப்பிக் கொடுக்க சொல்லியும் பலவகையில் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். இன்னிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக குறைதீர்க்கும் முகாமுக்கு வந்தார்.

வந்த இடத்துல என்ன பண்றாரு ஆட்சியர் நம்ம குறை கேட்டு சரி பண்ணி தருவாரா மாட்டாரா என்கிற அச்சத்துல நம்ம பிரச்சினைக்கு முக்கியத்துவம் தரனும் என கவனத்த ஈர்க்கும் வகையில் கையில் பிளேடை வைத்து அறுத்து கொண்டார்.

ரத்தம் சொட்டுவதை கண்ட மக்கள் போலீஸ்கு தகவல் கொடுத்தனர். ஒடி வந்த போலீசார், நிவாசனின் கைகளை பிடித்து காவல்துறை வண்டியில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...