கோவை விமான நிலையத்தை சுத்தம் செய்யும் நவீன ஸ்கூட்டர்கள்

விமான நிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு இதற்காக 2 நவீன ஸ்கூட்டர்கள் வாங்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது என்று விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை விமான நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் நவீன ஸ்கூட்டர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய விமான நிலையமாக கோவை விமான நிலையம் திகழ்கிறது. இங்கு இருந்து சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய வெளிநாடுகளுக்கும் இடையே 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன.

கோவை மட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் உள்ள நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பயனடைந்து வருகிறார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க கோவை விமான நிலையத்தை தூய்மையாக வைக்கவும் விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் உத்தரவின் பேரில் விமான நிலையத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்புற பகுதிகளில் குப்பைகள் இன்றி சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தரையில் கிடக்கும் குப்பை மற்றும் மண்ணை அகற்றும் பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் உள்ள அலங்கார கண்ணாடி உள்ளிட்ட உயரமான இடங்களை சுத்தம் செய்ய நவீன ஹைட்ராலிக் பேட்டரி வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விமான நிலையத்தை தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிக்காக சாலையில் இயக்கும் பேட்டரி ஸ்கூட்டர் போன்று 2 நவீன ஸ்கூட்டர் வாகனங்கள் அண்மையில் வாங்கப்பட்டு உள்ளன. அந்த வாகனங்களில் முன் பகுதி மற்றும் பின் பகுதியில் சுத்தம் செய்யும் மாப்பு பொருத்தப்பட்டுள்ளது. ஒருவர் அமரும் வகையில் இருக்கை அமைக்கப்பட்டு ஸ்கூட்டர் வாகனத்தை இயக்கி சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நேற்று முன்தினம் (மார்ச்.6) முதல் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறுகையில், கோவை விமான நிலையத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் விமான நிலையத்தின் சுத்தம், சுகாதாரம் மிகவும் முக்கியம். எனவே விமான நிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு இதற்காக 2 நவீன ஸ்கூட்டர்கள் வாங்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் மாலை நேரத்தில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த புகை அடிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...