கோவையில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, அலைபேசி எண் மாற்றம், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் தொடா்பான குறைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (மார்ச்.7) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (மார்ச் 9) நடைபெறவுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சனிக்கிழமை (மார்ச் 9) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, அலைபேசி எண் மாற்றம், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் தொடா்பான குறைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...