கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் சிவராத்தியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி

மாசாணியம்மனின் இருதயத்தியில் இருந்து கைபிடி மண்ணை எடுத்து, அதில் இருந்த மனித எலும்புகளை எடுத்து வாயில் கடித்தபடி மயான கொள்ளை நிகழ்ச்சியில் பூசாரி ஈடுபட்டதை பக்தர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.


கோவை: கோவை சொக்கம்புதூரில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மயானத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சியானது நடத்தப்படுவது வழக்கம். சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கபட்ட மாசாணியம்மன் உருவத்தை வைத்து மேளதாளம் முழங்க நள்ளிரவு பூசைகள் நடத்தப்பட்டது.

கையில் அரிவாள், சூலாயுதம் போன்ற ஆயுதங்களுடன் மயான பூசையில் ஈடுபடும் பூசாரி மாசாணியம்மனின் களி மண் உருவத்தை சுற்றி ஆக்ரோசமாக நடனமாடியபடி பூசை செய்தார்.



இதைதொடர்ந்து மாசாணியம்மனின் இருதயத்தியில் இருந்து கைபிடி மண்ணை எடுத்து,அதில் இருந்து மனித எலும்புகளை எடுத்து வாயில் கடித்தபடி மயான கொள்ளை நிகழ்ச்சியில் பூசாரி ஈடுபட பக்தர்கள் ஆரவாரத்துடன் மாயன கொள்ளை நிகழ்ச்சியை நள்ளிரவில் கண்டு பரவசமடைந்தனர்.

பின்பு மாசாணியம்மனின் உருவத்தின் இருதய பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை சொக்கம் புதூரில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று அங்கு அந்த மண்ணை வைத்து பூசை செய்தனர். நள்ளிரவில் நடைபெறும் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது சொக்கம்புதூர் பகுதி மக்களின் நம்பிக்கை. இதே போன்று கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவு பூசைகளானது நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...