அகில இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி துணை தலைவராக கோவையை சேர்ந்த இன்ஜினியர் சந்திரசேகர் தேர்வு

கோவையை சேர்ந்த தமிழக பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக உள்ள இன்ஜினியர் ஆர்.சந்திரசேகர் அகில இந்திய துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். வெற்றி சான்றிதழை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உமேஷ் சிங்கா வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.



கோவை: அகில இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் (Paralympic committee of India) துணை தலைவராக இன்ஜினியர் சந்திரசேகர் தேர்வு பெற்றார்.

புதுடில்லியில் பாரா ஒலிம்பிக் கமிட்டியின் (பிசிஐ) தேர்தல் நடந்தது. சங்க வளாகத்தில் நடந்த இந்த தேர்தலில் 2024 முதல் 2028ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.

இதில் கோவையை சேர்ந்த தமிழக பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக உள்ள இன்ஜினியர் ஆர்.சந்திரசேகர் அகில இந்திய துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.

வெற்றி சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உமேஷ் சிங்கா வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் தலைவராக பாரா ஒலிம்பிக் பதக்க வீரர் தேவேந்திரா ஜகாரியா தேர்வு பெற்றார்.

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஏற்கனவே பதவி வகித்து வரும் இன்ஜினியர் சந்திரசேகர் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி, போட்டிகளில் தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

ஆசிய அளவிலான போட்டி, உலக அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இன்ஜினியர் சந்திரசேகர் மாற்றுத்திறன் வீரர்கள் அதிகளவில் பங்கேற்க, பதக்கங்கள் குவிக்க தேவையான ஊக்கம், ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தகுதியுள்ள பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு, ஊக்கத்தொகை பெற்று தந்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவர் முதல் முறையாக பாரா ஒலிம்பிக் கமிட்டியில் அகில இந்திய துணைத் தலைவராக தேர்வாகியுள்ளார். இது தமிழக மாற்று திறன் விளையாட்டு வீரர்களுக்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தை அளித்துள்ளது.

தென் இந்தியாவை சேர்ந்தவர் முதல் முறையாக பாரா ஒலிம்பிக் கமிட்டியில் துணைத் தலைவர் பதவியை பெற்று பெருமை சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

துடில்லியில் பாரா ஒலிம்பிக் கமிட்டியில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் காண பாராட்டு விழா நடந்தது. இதில் துணைத் தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர் பேசுகையில்," எப்போதும் வெற்றியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கக் கூடாது. விடாமுயற்சி, பயிற்சி, நம்மால் முடியாத அளவை தாண்டியும் திறமையை காட்டும் உத்வேகம் எப்போதும் இருக்க வேண்டும்.

Never ever give up என்பது நமது நோக்கமாக இருக்க வேண்டும். இந்த பாரா ஒலிம்பிக் கமிட்டி அடுத்த கட்டத்துக்கு செல்லும் வகையிலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். மாற்றுத்திறனாளி வீரர்கள் தங்களது முழு திறமையும் காட்டி அதிக பதக்கங்களை வெல்லும் வகையில் தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்படும். கமிட்டி நிர்வாகிகள் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு இந்தியாவிற்கு அதிக பதக்கங்கள் வெற்றி பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்றார்.

இது தொடர்பாக இன்ஜினியர் சந்திரசேகர் கூறுகையில், " மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தங்களது திறமைகளை காட்ட தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். பாரீசில் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் சர்வ தேச பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இதில் திறன் மிக்க வீரர்கள் பங்கேற்க வாய்ப்பு தரப்படும். பாரா ஒலிம்பிக் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் குவிக்க தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். கடந்த காலங்களில் சர்வதேச போட்டியில் பெற்ற வெற்றிகளை காட்டிலும் இரு மடங்கு வெற்றிகளை எட்டும் வகையில் வீரர்கள் தீவிர பயிற்சியில் இருக்கிறார்கள் என்றார்.

இன்ஜினியர் சந்திரசேகர் கோவை நேரு ஸ்டேடியத்தில் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கான மாநில அளவிலான போட்டிகளை நடத்தியுள்ளார். தேசிய அளவிலான வீரர்களை குறிப்பாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட வீரர்களுக்கு உதவிகரமாக செயல்பட்டு வருகிறார்.

வெளிநாடுகளில் நடந்த போட்டியில் வீரர்களுடன் சென்று ஊக்கப்படுத்தி வந்துள்ளார். கோவையை சேர்ந்த இன்ஜினியர் சந்திரசேகர் அகில இந்திய பதவியை பெற்றிருப்பதால் மேலும் பல பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவார் என்ற நம்பிக்கை மாற்றுத்திறனாளிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...