குருக்கம்பாளையத்தில் 10 குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு - பாதிக்கப்பட்டவர்கள் கோவை ஆட்சியரிடம் மனு

அமைதியாக இருந்து வரும் ஊரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை செய்து வரும் அம்மாசை, குப்பன், மாகாளி, முத்தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குருக்கம்பாளைய ஊர் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் குருக்கம்பாளையத்தில் ஸ்ரீ பட்டாசு பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஊர் மக்கள் அனைவரும் வழிபாட்டு வருகின்றனர். இந்நிலையில் சுந்தரம் என்பவரின் தாத்தா தர்மகத்தாவாக 3 தலைமுறையாக கோவிலில் படைக்கலம் எடுத்து பூஜை செய்து வந்தனர்.

கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாததால் கோவில் நிகழ்ச்சியை கவனிக்க முடியவில்லை. அப்போது ஊரைச் சேர்ந்த அம்மாசை என்பவர் கவனித்து வந்தார். தற்போது அம்மாசை கோவில் திருவிழாவை தன்னிச்சையாக நடத்த முயற்சித்து வருகிறார்.



தற்போது 3 தலைமுறையாக கோவிலில் பூஜை செய்து வந்தவர்கள் தட்டி கேட்டதற்கு அவர்களையும் அவருக்களுக்கு ஆதரவாக இருந்த 10 குடும்பத்தினரையும் அம்மாசை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் அமைதியாக இருந்து வரும் ஊரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை செய்து வரும் அம்மாசை, குப்பன், மாகாளி, முத்தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுக்கவிட்டால் ஓட்டு அட்டையை திரும்ப தர போதவாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...