விவசாயிகள் போராட்டதிற்கு ஆதரவாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இளைஞர்கள் போராட்டம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!



டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில்  போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர். 



கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் திடீரென திரண்ட இளைஞர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் இளைஞர்கள் பேசுகையில், 'டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் தற்போது போராட்டம் நடத்தி வருகிறோம். விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க பொதுமக்கள் வெளியே வரவேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களை செயல்படுத்த கூடாது. 



ஜல்லிக்கட்டு போராட்டத்தை வென்றெடுத்தது போல், இந்த போராட்டத்திலும் இளைஞர்கள் வெற்றி பெறுவோம்' என்றனர்.

 முன்னதாக இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை வஉசி மைதானத்தில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். ஆனால் காவல்துறையினர் வஉசி மைதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளதாக தெரிவித்து போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டனர். ஆனால், அவ்வாறு வஉசி மைதானத்தில் எவ்வித தடைஉத்தரவும் அமல்படுத்தவில்லை. அதனால், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாங்கள் திரண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம்" என்றனர்.



தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் . 



தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் திரண்டிருக்கும் தனியார் நிறுவன ஊழியர்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...