வரும் 18 ம் தேதி கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மாநகர காவல்துறை அனுமதி மறுப்பு

18ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதாலும், பிரதமருக்கான தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் என்ற காரணத்தினாலும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருப்பதாக மாநகர காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் வருகிற 18-ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுத்துள்ள நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகளுடன் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை ஐஜி லவ் குமார் தலைமையிலான எஸ்பிஜி குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சுமார் இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். பிரதமர் நிகழ்ச்சிக்கான அனுமதி மறுப்பு மற்றும் மத்திய பாதுகாப்பு குழுவினருடனான ஆலோசனை தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் கருத்து கேட்க முற்பட்டபோது தெளிவான ஒரு முடிவை இல்லாமல் கருத்து கூற முடியாது எனக் கூறிவிட்டு சென்றார்.

18ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதாலும், இதுவரை கோவையில் எந்த ஒரு ரோட் ஷோ நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கவில்லை என்பதாலும் பிரதமருக்கான தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் என்ற காரணத்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருப்பதாக மாநகர காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...