கோவையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் அஞ்சல் வழியில் வாக்களிக்க ஏற்பாடு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தினைப் பெற ஏதுவாக தங்களது இல்லங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், படிவம் - 12D மற்றும் வாக்காளர் பட்டியலுடன் நேரில் வருவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (மார்ச்.18) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால், 18-வது மக்களவைப் பொதுத் தேர்தல், 2024 பத்து (10) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+ வயதுக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் மேற்பட்ட வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் சிரமத்தினைத் தவிர்க்கும் பொருட்டு, அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நேர்வில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தினைப் பெற ஏதுவாக தங்களது இல்லங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth lever Officer), படிவம் - 12D மற்றும் வாக்காளர் பட்டியலுடன் நேரில் வருகை தருவார்கள். அவ்வாறு தங்களது இல்லங்களுக்கு வருகை தரும் போது உரிய படிவத்தில் தங்களது விருப்பத்தினை படித்துப் பார்த்தும்/ படிக்கக் கேட்டும், ஆதாரங்கள் ஏதும் கோரும் பட்சத்தில் அதன் நகலினை சமர்ப்பித்து, ஒப்பம் மாவட்ட நிர்வாகத்திற்கு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அஞ்சல் வழியில் வாக்களிப்பது தொடர்பான, தங்களது விருப்பத்தினை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ அல்லது கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமையப்பெற்றுள்ள எண். 20, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்குரிய மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும் மற்றும் எண். 21, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குரிய தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்திலும் அல்லது தங்களது பகுதிக்குட்பட்ட உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் (வட்டாட்சியர் அலுவலகம்) அலுவலகத்திற்கோ நேரில் சென்று (24.03.2024)-க்குள் படிவம் 12D-யினை, இதற்காக பிரத்யேகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் உரிய ஒப்பம் செய்து சமர்ப்பித்து எதிர்வரும் மக்களவைத் தேர்தலை, சுமூகமாகவும், நேர்மையாகவும் நடத்திட தக்க ஒத்துழைப்பு நல்கிடுமாறு மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+ வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...