கோவை விஜயா வாசகர் வட்டத்தின் 2024-ஆம் ஆண்டுக்கான உலக புத்தக தின விருதுகள் அறிவிப்பு

ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளா் எஸ்.சங்கரநாராயணன் (சென்னை), புதுமைப்பித்தன் விருதுக்கு எழுத்தாளா் மயிலன் எ.சின்னப்பன் (திருச்சி), மீரா விருதுக்கு கவிஞா் மா.ஸ்டாலின் சரவணன் (புதுக்கோட்டை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை விஜயா வாசகா் வட்டத்தின் 2024-ஆம் ஆண்டுக்கான உலக புத்தக தின விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து விஜயா பதிப்பக நிறுவனா் மு.வேலாயுதம் (மார்ச்.19) கூறியிருப்பதாவது, உலக புத்தக தினத்தை (ஏப்ரல் 23) முன்னிட்டு ஆண்டுதோறும் கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகா் வட்டம் சார்பில் எழுத்தாளா்கள் ஜெயகாந்தன், மீரா, புதுமைப்பித்தன் ஆகியோரின் பெயரால் எழுத்தாளா்களுக்கு விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர சிறந்த விற்பனையாளருக்கு வானதி விருதும், சிறந்த நூலகருக்கு சக்தி வை.கோவிந்தன் விருதும் வழங்கப்படுகிறது.

2024-ஆம் ஆண்டுக்கான விஜயா வாசகா் வட்ட விருதுகளுக்கான எழுத்தாளா்களைத் தோ்வுக் குழு தோ்ந்தெடுத்துள்ளது. அதன்படி ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளா் எஸ். சங்கரநாராயணன் (சென்னை), புதுமைப்பித்தன் விருதுக்கு எழுத்தாளா் மயிலன் எ.சின்னப்பன் (திருச்சி), மீரா விருதுக்கு கவிஞா் மா.ஸ்டாலின் சரவணன் (புதுக்கோட்டை) ஆகியோர் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சிறந்த புத்தக விற்பனையாளருக்கான வானதி விருது கும்பகோணம் ஸ்ரீ மார்க்கண்டேயா புக் கேலரி ஜே.கல்யாணசுந்தரத்துக்கும், சிறந்த நூலகருக்கான சக்தி வை.கோவிந்தன் விருது, சென்னை திருவொற்றியூா் முழுநேர அரசு கிளை நூலகத்தின் இரண்டாம் நிலை நூலகா் பா.பேனிக் பாண்டியனுக்கும் வழங்கப்பட உள்ளது.

ஜெயகாந்தன் விருதுக்கு ரூ.1 லட்சம், புதுமைப்பித்தன், மீரா, வானதி, சக்தி வை.கோவிந்தன் விருதுகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. 9-ஆவது ஆண்டாக நடைபெற இருக்கும் விஜயா வாசகா் வட்ட விருதுகள் வழங்கும் விழா, உலக புத்தக தினமான ஏப்ரல் 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ராஜ வீதி விஜயா பதிப்பகத்தின் மேல்தளத்தில் உள்ள ரோஜா முத்தையா அரங்கில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...