கோவையில் கோலம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய சத்துணவு அமைப்பாளர்கள்

ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில், மாநகராட்சி சத்துணவு அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ரங்கோலி கோலமிட்டு இன்று (மார்ச்.19) விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் கோவை மாநகராட்சி சத்துணவு அமைப்பாளர்கள் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதன்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில், மாநகராட்சி சத்துணவு அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ரங்கோலி கோலமிட்டு இன்று (மார்ச்.19) விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



அந்தக் கோலங்களில் "வாக்களிப்பது கடமை அதுவே நமது உரிமை, வாக்கின் வலிமை தேசத்தின் பெருமை, ஒரு விரலில் சரித்திரம் படைப்போம், (19.04.2024) வாக்களிக்கும் நாள், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல நாட்டிற்கான எனது முதல் வாக்கு" உள்ளிட்ட வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் அவர்கள் வரைந்த இரண்டு ஓவியங்களிலும் தேர்தலை குறிப்பிடும் வகையில் வாக்களிக்கும் இயந்திரம் தேசியக்கொடி, வாக்கு மை, தேசிய கொடி, இந்தியா வரைப்படம், முக கவசம் அணிந்த வாக்காளர்களின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த ஓவியங்களை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் செல்வ சுரபி நேரில் பார்வையிட்டார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...