பாரா ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்கான வீரர் தேர்வில் குளறுபடி-கோவையை சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை புகார்

சமீபத்தில் நடந்த ஏசியன் கேம்ஸ் போட்டிகளுக்கு முறைப்படி தகுதி தேர்வு நடைபெறவில்லை என்றும், உலக தரவரிசையில் 49 வது இடத்தில் இருக்கும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் மாற்றுத்திறனாளி வீராங்கனை தீபீகா ராணி வேதனை தெரிவித்தார்.



கோவை: கோவை உருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபீகா ராணி, மாற்றுத்திறனாளியான தீபீகா, இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பாக சென்னையில் நடந்த தேசிய அளவிலான வீல் சேர் வாள் வீச்சு போட்டியில் தங்கம், வெள்ளி வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்நலையி்ல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு ஒன்றை அளிக்க வீல் சேரில் வந்த மாற்றுத்திறனாளி தீபிகா ராணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர்,தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பாரா ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்கான வீரர்,வீராங்கனைகளை தேர்வு செய்வதில் குளறுபடிகள் நடப்பதாக கூறினார்.



இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவே மனு அளிக்க வந்துள்ளதாக கூறினார். சமீபத்தில் நடந்த ஏசியன் கேம்ஸ் போட்டிகளுக்கு முறைப்படி தகுதி தேர்வு நடைபெறவில்லை என குற்றம் சாட்டிய அவர், உலக தரவரிசையில் 49 வது இடத்தில் இருக்கும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என வேதனை தெரிவித்தார்.

இது போன்று பல திறமையான வீர்ர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கூறிய அவர், சரியான தகவல்களை மத்திய மாநில விளையாட்டு ஆணையங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்ட அவர்,பல திறமையான வீரர்கள் இருந்தும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால், வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கூறினார். இதை அரசு கவனத்தில் கொள்ளும் பட்சத்தில் சர்வதேச அளவில் இன்னும் பல திறமையான மாற்றுத்திறனாளி வீரர்கள் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...