நத்தக்காடையூர் அருகே பாராளுமன்ற தேர்தல் புறக்கணிப்பதாக கிராம மக்கள் பிளக்ஸ் வைத்ததால் பரபரப்பு..!

ஒவ்வொரு தேர்தலின் போது வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்கள், தேர்தலில் வெற்றி பெற்று பாலத்தை சரி செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தேர்தல் முடிந்தவுடன் தங்கள் பகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விடுவதாக குற்றம்சாட்டினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நத்தக்காடையூர் அருகே உள்ள உலகுடையார் பாளையத்தில் கிராம மக்கள் பாராளுமன்ற தேர்தல் புறக்கணிக்க போவதாக பிளக்ஸ் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், சட்டமன்ற தேர்தலின் போது சேதமடைந்த பாலத்தை சரிசெய்து கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, நிறைவேற்றாததால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்து ஈரோடு - பழனி பிரதான சாலை அருகே பிளக்ஸ் வைத்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் தினமும் சேதமடைந்த பாலத்தின் வழியாக பள்ளி வேன்கள், கிராம மக்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லை என்றால் வாக்களிக்கப்போவதில்லை என்றனர்.

காங்கேயம் நத்தக்காடையூர் அருகே உள்ள உலகுடையார் பாளையம். இந்த கிராமமானது 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். உலகுடையார் பாளையம் ஊரின் மையப்பகுதியில் பாலம் ஒன்று உள்ளது. பாலத்தின் கீழ் செல்லும் நீரானது கால்வாய் மாற்று உரம்பு நீர் குளத்திற்கு சென்றடைகின்றது.



இந்த பாலமானது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பலத்த சேதமடைந்து குண்டும் குழியுமாக மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்றத்திலும் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் கொடுத்தும் எவ்வித பயனும் இல்லை என்கின்றனர். ஒவ்வொரு தேர்தலின் போது வாக்கு கேட்க வரும் வேட்பாளர்கள் உடனடியாக தேர்தலில் வெற்றி பெற்று வந்தவுடன் பாலத்தை சரி செய்து கொடுப்பதாக வெற்று வாக்குறுதியாக தெரிவித்துவிட்டு செல்கின்றனர். பின்னர் தேர்தல் முடிந்தவுடன் எங்கள் பகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விடுகின்றனர்.

மேலும், இவ்வழியாக வேலைக்கு போகும் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பள்ளி வேன்கள் பாலத்தை கடந்து செல்கிறது. பாலமே பழுதடைந்து உள்ளதால் இதை கடந்து செல்லும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவ்வாறு விபத்து நடைபெறும் முன்னரே இதை சரிசெய்து கொடுக்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றனர். அதேசமயம், இப்பாலத்தை தவிர்த்து நத்தக்காடையூர் மற்றும் நால்ரோடு வழியாக காங்கேயம் மற்றும் ஈரோடு பகுதிகளுக்குச் செல்ல முடியும் ஆனால், சுமார் 3 முதல் 6 கிலோமீட்டர் வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த பாலத்தை சரிசெய்து சாலைகளை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும். இல்லை என்றால் கிராம மக்கள் பாராளுமன்ற தேர்தல் புறக்கணிக்க போவதாகவும் அதனால் தான் பிளக்ஸ் வைத்து அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்கின்றனர்.

மேலும் சட்டமன்றத் தேர்தலின் போது சேதமடைந்த பாலத்தை சரி செய்து கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து விட்டு நிறைவேற்றாததால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்து ஈரோடு பழனி பிரதான சாலை அருகே பிளக்ஸ் வைத்து எதிர்ப்பை தெரிவித்து வருவதாகவும். உடனடியாக கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்திற்குச் செல்வதாகவும் ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.



மேலும் இந்த பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பாலத்தின் மீது மண் மற்றும் தேங்காய் மஞ்சிகளை கொட்டிவைத்து நீண்டநாட்களாக விபத்தை தவிர்த்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...