கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது மூவர் பலி - தொடரும் உயிரிழப்புகள்..!

வெள்ளிங்கிரி மலை ஏற்றத்தின் போது, நேற்று மற்றும் இன்று, ஹைதராபாத், சேலம் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மூவர் உடல் நிலை குறைபாட்டால் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: தென் கைலாயம் என்று போற்றப்படும் கோவையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். 

குறிப்பாக, தை, மாசி, பங்குனி மற்றும் வைகாசி மாதங்களில் à®®à®²à¯ˆà®¯à¯‡à®±à¯à®±à®¤à¯à®¤à®¿à®±à¯à®•ு அனுமதி வழங்கப்படுவதால்,இம்மாதங்களில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் அடிவாரத்தில் அமைந்துள்ள கோவிலில் தரிசனம் செய்து விட்டு,ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க மலையேற்றத்தை மேற்கொள்வார்கள். 

அதன்படி, இவ்வாண்டு ஏராளமான பக்தர்கள் வந்து சென்று வரும் நிலையில். கடந்த வாரம் மழை ஏற்றத்தில் ஈடுபட்ட பக்தர்களில் இருவர் மூச்சு திணறல் காரணமாக மரணமடைந்தனர். 

இதைத்தொடர்ந்து, நேற்று (மார்ச்.24) மற்றும் இன்று அதிகாலை என வெள்ளியங்கிரி மலை ஏறிய மூவர் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நேற்று, ஹதாரபாத்தை சேர்ந்த சுப்பாராவ் (68) நான்காவது மலையில் ஏறி கொண்டிருந்த நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 

இதேபோல், சேலத்தை சேர்ந்த தியாகராஜன்(35) என்பவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு முதலாவது மலைப்பாதையில் உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் உடல்களை மீட்டு மலை அடிவாரத்திற்கு எடுத்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று (மார்ச்.25) அதிகாலை 4 மணி அளவில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (46) இரண்டாவது மலை அருகே வழுக்குப்பாறை பகுதியில் உடல் நலம் பாதிக்கபட்டு உள்ளதாக கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில், வனத்துறையினர் அங்கு சென்ற போது பாண்டியன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, அவரது உடலை மீட்டு மலை அடிவாரம் கொண்டு வந்த வனத்துறையினர் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஒவ்வொரு ஆண்டும் வெள்ளிங்கிரி மலையில் மலையேற்றத்தின் போது சிலர் உயிரிழப்பது வாடிக்கையாகி விட்ட நிலையில், நேற்று மற்றும் இன்று என இரு தினங்களில் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், மலை ஏற்றத்தில் ஈடுபடும் பக்தர்கள் இருதய, நுரையீரல் செயல்பாடு, இரத்த கொதிப்பு, உடலில் உள்ள சக்கரை அளவுகள் போன்ற முக்கிய பரிசோதனைகளைமேற்கொண்டு, தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னரே மலையேற்றத்தில் ஈடுபட வேண்டும் என்பதை தீர்க்கமாகவலியுறுத்துகிறது என்றால் அது மிகையாகாது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...