கோவையில் ஏப்ரல் 15 ஆம் தேதி திமுகவிற்கு ஆதரவாக கமலஹாசன் பிரச்சாரம்..!

வரும் மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 29 ஆம் தேதி முதல் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ஏப்ரல் 15 ஆம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளதாக ம.நீ.ம அறிவித்துள்ளது.


கோவை: வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சி இணைந்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரங்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவையில் திமுக வேட்பாளர், கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, ஏப்ரல் 15 ஆம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளதாக மநீம சார்பில் நேற்று மார்ச்.24 வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில், வரும் மார்ச் 29ஆம் தேதி முதல் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்றும் கோவை திமுக நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ஏப்ரல் 15 ஆம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 20 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மக்களின் கவனத்தை மேலும் ஈர்க்கும் விதமாக, நட்சத்திர பேச்சாளர்களை, கட்சிக்கு ஆதரவாக பேச அழைத்து வர முக்கிய அரசியல் கட்சிகள் மும்மரம் காட்டி வருகிறது.

அதன்படி, கடந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு வந்த மக்கள் நீதி மய்யதின் தலைவர் கமல்ஹாசன், இம்முறை திமுகவுக்கு ஆதரவாக செய்ய உள்ளது பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இம்முறை, மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைத்துள்ளகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என்று திமுக ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்படத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...