பொள்ளாச்சியில் ரூ. 25 ஆயிரம் டெபாசிட் பணத்தை 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல்..!

10 ரூபாய் நாணயத்தை கடைகள், ஒரு சில அரசு அலுவலகங்களில் வாங்குவது கிடையாது என்பதால் வாங்க வேண்டுமென வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிருபாகரன் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல்.


கோவை: வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மக்களவை தொகுதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் தனித்துப் போட்டியிடப்படுகிறது. இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக உடுமலையைச் சேர்ந்த பெஞ்சமின் கிருபாகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



இந்நிலையில், இன்று பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிருபாகரன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனுவை அளித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

மேலும், வேட்பு மனு தாக்கலுக்கு உண்டான டெபாசிட் பணத்தை செலுத்துவதற்காக 25 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களை டெபாசிட் பணமாக செலுத்தினார்.

இதுகுறித்து வேட்பாளர் கூறுகையில், பத்து ரூபாய் நாணயத்தை கடைகளில் மற்றும் ஒரு சில அரசு அலுவலகங்களிலும் வாங்குவது கிடையாது. இதனால் பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்து கடைகளிலும் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் நூதன முறையில் மனு தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...