திருப்பூரில் பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் உள் பனியன் அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல்..!

மேலும், தான் வெற்றி பெற்று வந்தால் மக்களுக்கும், மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.


திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று காலை கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய அவர், திருப்பூர் குமரன் நினைவகத்தில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்த அவர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.



வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் சட்டை அணியாமல் உள் பனியன் அணிந்தபடியும் திருப்பூரின் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் நூல் மற்றும் ஜமக்காளம் ஆகியவற்றை தட்டில் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வைத்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த காலங்களில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மத்திய அரசுக்கும் புரிந்துணர்வு இல்லாததின் காரணமாக திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் எந்த ஒரு திட்டங்களும் செயல்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும், தான் வெற்றி பெற்று வந்தால் மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அதே நேரத்தில் திருப்பூரில் பிரதான கோரிக்கையான நூல் விலையை கட்டுப்படுத்த, நூல் உற்பத்தியை முறைப்படுத்தி நலிவடைந்த தொழில்களை மீட்டெடுக்க மூன்றாம் முறையாக மத்தியில் பொறுப்பேற்கும் மோடி தலைமையிலான அரசிடம் குரல் கொடுத்துப் பெற்றுத் தருவோம் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு பாஜகவை ஒடுக்குவதற்கான பணிகளை மேற்கொள்வதாகவும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கூட பாஜகவுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...