இது தேர்தல் அல்ல..! போர். நம்மை பிரிக்க வேண்டும் என்பதுதான் இந்த புழுக்களின் எண்ணம் - கோவையில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

கோவை சிங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, ஏன் பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது என்பதை தீர்க்கமாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும், என்றார்.


கோவை: கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, நேற்று சிங்காநல்லூரில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கிய கூட்டத்திற்கு, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நீதிக்கட்சியில் இருந்து துவங்கி, இந்திய அளவில் இன்று தமிழகம் தனித்துவ மிக்க மாநிலமாக திகிழ்கிறது. இது, வடக்கில் இருப்பவர்களுக்கு புரியவில்லை. இந்த தேர்தலை பொறுத்தவரை வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. அதனால், கடைசி 10 நாட்கள் வேலை செய்தால் போதும் என நினைக்கக்கூடாது.

ஒவ்வொரு நாளும் உதயசூரியனை வாக்காளர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். நாம் ஏன் திமுக பக்கம் நிற்க வேண்டும்? நாம் ஏன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்கம் நிற்க வேண்டும்? என மக்கள் உணரும் வகையில், கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

நாம் எதற்காக பாஜவை ஆதரிக்கக்கூடாது? ,“பாஜவும், அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ” என்பதையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். தமிழை ஒழிக்கவேண்டும் என துடிக்கும் பாஜகவை ஒழிக்கவேண்டிய தேர்தல் இது.

இங்கு ஒரு சோதனை, அங்கு ஒரு சோதனை என மிரட்டினால் அசரக்கூடிய இயக்கமா திமுக? செந்தில்பாலாஜி மீண்டும் வருவார். அவர் வந்தால் என்ன ஆகுமோ என்ற பயம்,

எதிரணிக்கு உள்ளது. அதனால், என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து வருகிறார்கள்.

எங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வழி இருக்கிறது. அதை, கையில் எடுப்போம். எதிர்த்து அடிப்போம். இது இரு இயக்கங்களுக்கான தேர்தல் அல்ல. இது, தமிழினத்தை அழிக்க துடிக்கும் நபர்களுக்கு எதிரான தேர்தல்.

கோவைக்கு வந்து பிரதமர் எதை பரப்ப வேண்டும் என நினைக்கிறார்? கலவரத்தில் மட்டும் தான் இந்த புழுக்கள் வாழமுடியும். நம்மை பிரிக்க வேண்டும் என்பதுதான் இந்த புழுக்களின் எண்ணம்.

இது, தேர்தல் அல்ல..! போர். இந்த மண், பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்ந்த மண். ஒவ்வொரு நாளும், களமாடி வெற்றிபெற வேண்டும். யாரும் யோசித்து பார்க்க முடியாத வெற்றியை தர வேண்டும்.

கோவைக்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது. திராவிட குடும்பம் தான் நான். மன்னார்குடியில் தொழில்துறையை வளர்த்துவிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன்.

கோவையில் விமான நிலைய விரிவாக்கம் கூடிய விரைவில் வரப் போகிறது. அதன்மூலம், வரலாறு காணாத தொழில் வளர்ச்சி நடக்கப்போகிறது. எல்லோருக்குமான தொழில் வளர்ச்சியாக அது இருக்கும். இது வரை காணாத வளர்ச்சியை, கோவை காண உள்ளது. இவ்வாறு அமைச்சர் டி.ஆர். பி.ராஜா பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...