நல்லூரில் சரக்கு வாகனத்தில் 3.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.!

குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு டிஎஸ்பி ஜனனி பிரியா தலைமையில் போலீசார் நல்லூரில் வாகன சோதனை நடத்தியதில், சரக்கு வாகனத்தில், 3700 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் அமைந்துள்ள, நல்லூர் ஊராட்சியில் சரக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 3.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 

குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு, டிஎஸ்பி ஜனனி பிரியா தலைமையில் போலீசார் நல்லூரில் வாகன சோதனை நடத்தியதில், சரக்கு வாகனத்தில், 3700 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

பின்னர், கடத்தலில் ஈடுபட்ட, சதீஸ்குமார் (27) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீஸார், 3.7 டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய மணிகண்டன் என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...