கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதலில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல்

2016 ஆம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த விவாகரத்தில், பொறுப்பு பதிவாளர்கள் 2 பேர், தற்போதைய சிண்டிகேட் உறுப்பினர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதலில்முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பதிவாளர்கள் இருவர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் வழங்கி உள்ளது.

2016 ஆம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர்கள் இரண்டு பேர், பேராசிரியர்கள் ஆறு பேர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளை சேர்ந்த சிண்டிகேட் உறுப்பினர்கள் இரண்டு பேர், சுயநிதி கல்லூரிகளை சேர்ந்த முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர்கள் இரண்டு பேர் என மொத்தம் 12 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், உயர் கல்வித்துறை செயலர் கார்த்தி தலைமையில் அண்மையில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில், பாரதியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர்கள் இரண்டு பேர், தற்போதைய சிண்டிகேட் உறுப்பினர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் காலமாகிவிட்ட நிலையில், பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளில் பணிபுரியும் நான்கு பேர் மீது கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...